IMG 20260123 WA0000
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: போதைப்பொருளுடன் மேலும் ஒரு இளைஞர் கைது!

Share

ஜிந்துப்பிட்டி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்கரை வீதி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்றைய தினம் (22) 95 வத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இந்தச் சந்தேகநபர் பிடிபட்டார். இதன்போது அவரிடமிருந்து 24 கிராம் 300 மில்லிகிராம் ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஜிந்துப்பிட்டி பகுதியில் அண்மையில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னதாக 5 சந்தேகநபர்களைக் கைது செய்திருந்த நிலையில், தற்போது கைதானவருடன் சேர்த்து மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (23) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இக்கொலைச் சம்பவத்திற்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் இடையே தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்தில் கடற்கரை வீதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...