5ec14a30 616d 11ef b970 9f202720b57a.png
செய்திகள்அரசியல்இலங்கை

இனி தீவிர அரசியலில் நான் இல்லை: மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின் ரணில் விக்கிரமசிங்க அதிரடி அறிவிப்பு!

Share

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (23) காலை கண்டிக்கு விஜயம் செய்து, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.

முன்னாள் ஜனாதிபதி முதலில் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய திப்போட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்புகளின் போது, நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் முக்கிய தேசிய விடயங்கள் குறித்து மகாநாயக்க தேரர்களுடன் அவர் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மகாநாயக்கர்களுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்த ரணில் விக்கிரமசிங்கவிடம், நாட்டின் தற்போதைய அரசியல் மாற்றங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மிகச் சுருக்கமாக இனி தீவிர அரசியலில் நான் ஈடுபடவில்லை பதிலளித்தார்:

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ரணில் விக்கிரமசிங்க, இன்றைய இந்த அறிவிப்பின் மூலம் தனது அரசியல் ஓய்வை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...