1708414885 BELLANA MEDIA 6
செய்திகள்இலங்கை

என்னைக் கொலை செய்யச் சதி செய்கிறார்கள்: சிஐடி முன்னிலையில் இன்று ஆஜராகிறார் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன!

Share

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கொலைப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2025 டிசம்பர் 09-ஆம் திகதி சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் (Facebook) வெளியான ஒரு சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பாகவே இந்த விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த காணொளியில் பேசியுள்ள அசேல சம்பத் என்ற நபர், “வைத்தியர் ருக்‌ஷன் பெல்லனவைச் சுடுவதற்கு அனில் ஜெயசிங்க தயாராகி வருகிறார்” எனத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருந்தார்.

இந்தத் தகவல் ஒரு கொலைச் சதி முயற்சி தொடர்பானதாகக் கருதப்படுவதால், இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக வைத்தியர் பெல்லன அழைக்கப்பட்டுள்ளார்.

கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி வழங்கிய அறிவுறுத்தலின்படி பழைய பொலிஸ் தலைமையகக் கட்டடத்தின் 4-வது மாடியில் அமைந்துள்ள கொலைப் புலனாய்வுப் பிரிவில் அவர் முன்னிலையாக வேண்டும்.

இந்தக் கொலை அச்சுறுத்தல் தொடர்பான தனது தரப்பு விளக்கத்தை வழங்குவதற்கும், அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கும் சிஐடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சுகாதாரத் துறையின் முக்கிய அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கவாதிகளுக்கு இடையே நிலவி வரும் தொடர்ச்சியான மோதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தற்போது பொலிஸ் விசாரணை வரை சென்றுள்ளதுடன், இது வைத்தியசாலை நிர்வாக மட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...