26 69589bb718127
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தம்பலகாமத்தில் குரங்கு தாக்குதல்: பள்ளிவாசல் பணியாளர் உட்பட இருவர் காயம்.

Share

திருகோணமலை, தம்பலகாமம் – அரபா நகர் பகுதியில் நிலவும் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அண்மைய நாட்களாக குரங்குகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

தம்பலகாமம் அரபா நகர் பள்ளிவாசலில் பணியாற்றும் முஅத்தின் (பணியாளர்), நேற்று (05) பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருந்தபோது குரங்கு ஒன்றினால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான அவர், உடனடியாகக் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதே குரங்கால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனும் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு இது குறித்து பலமுறை அறிவித்தும், அவர்கள் இதுவரை எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அரபா நகர் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குரங்குகளின் பயம் காரணமாக மக்கள் வீதிகளில் நடமாட அஞ்சுகின்றனர்.பள்ளிவாசலுக்குச் சென்று தமது மதக் கடமைகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

காட்டுப் பகுதிகளில் இருந்து ஊருக்குள் புகுந்துள்ள இந்தக் குரங்கைப் பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் உடனடியாக முன்வர வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
Untitled 14
செய்திகள்இந்தியா

த.வெ.க-வை கண்டு தி.மு.க அஞ்சுகிறது: பரப்புரைக்குத் தடை விதித்த அரசுக்கு விஜய் கடும் கண்டனம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய், சென்னையில் தனது தேர்தல் பரப்புரைக்குத் திட்டமிடப்பட்டிருந்த இடத்தில்...

Untitled 13
செய்திகள்உலகம்

ஈரான் பாடசாலைத் தாக்குதல் ஒரு போர்க்குற்றம்: ஐ.நா.வில் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி காட்டம்!

ஈரானியப் பாடசாலை மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 175 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டமை...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் மணல் கடத்தல் உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் மோதியதில், கடமையில் இருந்த...

Untitled 11
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிர்ச்சி – ஆரம்பப் போட்டிகளில் தோனி பங்கேற்பது சந்தேகம்!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டனும்...