IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

Share

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

“தையிட்டி எங்கள் சொத்து – எமது காணிகளை அபகரிக்காதே” என மாணவர்கள் முழக்கமிட்டதோடு, தனியார் காணிகளில் அமையப்பெற்றுள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

காவல்துறை அடக்குமுறை: தையிட்டியில் நேற்று (21) இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் போது, பொலிஸார் நடந்துகொண்ட விதம் “காட்டுமிரண்டித்தனமானது” என மாணவர்கள் சாடினர்.

அமைதி வழியில் போராடியவர்கள் அநியாயமாகக் கைது செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டித்த மாணவர்கள், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரினர்.

பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நில ஆக்கிரமிப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம் என மாணவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...