25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

Share

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித் திட்டம் ஒன்றை இந்தியா அறிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நாளை (திங்கட்கிழமை) ஒருநாள் விஜயமாக கொழும்பு வரவுள்ளார்.

அனர்த்தத்திற்குப் பிந்தைய மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக இந்தியா சார்பில் வழங்கப்படவுள்ள பிரம்மாண்ட உதவித் திட்டத்தை அவர் கொழும்பில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது விஜயத்தின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை, இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளை அவர் கூட்டாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிகிறது.

இலங்கை அனர்த்தத்தில் சிக்கிய உடனேயே இந்தியா தனது நிவாரண உதவிகளையும் மீட்புக் குழுக்களையும் அனுப்பி வைத்திருந்தது. தற்போது வரை இந்தியாவின் மீட்பு நடவடிக்கைகள் இலங்கையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய பேருதவித் திட்டம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

அமைச்சர் ஜெய்சங்கர் வேறு எந்தெந்த எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திப்பார் என்பது குறித்த விபரங்கள் இன்று மாலை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இந்தியத் தூதரகம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...