password 2025 06 20 22 08 58
உலகம்செய்திகள்

தரவுக் கசிவு: 20 கோடிக்கும் அதிகமான பயனர்களின் விபரங்கள் திருட்டு!

Share

உலகில் அதிக பயனர்களைக் கொண்ட ஆபாச இணையத்தளங்களில் ஒன்றான போர்ன்கப் ப்ரீமியம் (Pornhub Premium) பயனர்களின் அந்தரங்கத் தரவுகள் பாரிய அளவில் கசிந்துள்ளதாக சர்வதேசத் தரவுப் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

சுமார் 20 கோடிக்கும் (200 Million) அதிகமான தரவுகள் ஒரு தரப்பால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ப்ரீமியம் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள், அவர்கள் தேடிய விபரங்கள் (Search History), பார்த்த காணொளிகளின் பட்டியல் மற்றும் அவர்கள் இருக்கும் இருப்பிடம் (Location) உள்ளிட்ட மிக முக்கியமான தகவல்கள் இதில் அடங்கும்.

இந்தத் தரவுக் கசிவு போர்ன்கப் தளத்தின் நேரடி ஊடுருவல் அல்ல என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர் நடத்தைகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் மிக்ஸ்பெனல் (Mixpanel) எனும் பகுப்பாய்வுச் சேவையூடாகவே இந்தத் தரவுகள் கசிந்துள்ளன.

போர்ன்கப் நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டிலேயே மிக்ஸ்பெனல் நிறுவனத்துடனான உறவை முறித்துக்கொண்ட போதிலும், அதற்கு முன்னர் சேகரிக்கப்பட்ட பழைய தரவுகளே தற்போது திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தரவுக் கசிவு காரணமாகப் பயனர்களின் தனிப்பட்ட இரகசியங்கள் பகிரங்கப்படுத்தப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
05 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாத்தறை சிறைச்சாலையில் கைதிகள் இடமாற்றம்: பதற்றமான சூழலால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

மாத்தறை சிறைச்சாலையிலிருந்து ஒன்பது கைதிகள் அங்கிருந்த அங்கிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாத்தறை சிறைச்சாலையினுள்...

04 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளங்கன் வைத்தியசாலை துஷ்பிரயோகச் சம்பவம்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போராட்டத்திற்கு தடை!

டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் பெண்ணின் உடல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும்...

03 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்கோவிட்ட துறைமுகத்தில் 103 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் கொக்கைன் மீட்பு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்குரிய ஆழ்கடல்...

02 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு சின்னப்புல்லுமலை பகுதியில் காட்டு யானை தாக்குதல்: 59 வயதுடைய நபர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – செங்கலடி, சின்னப்புல்லுமலை கிராமத்தில் நேற்று (மார்ச் 7) இரவு காட்டு யானை தாக்கியதில்...