25 693c8bcce20f5
இலங்கைசெய்திகள்

டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட காணிகள்: பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்பட்டு, நட்டஈடு வழங்கத் திட்டம்!

Share

அண்மையில் வீசிய ‘டித்வா’ புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது.

காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராச்சி இது குறித்துத் தெரிவிக்கையில், மண்சரிவுக்கு உள்ளான காணிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக மாற்றிய பின்னர், அக்காணிகளை மீண்டும் அளவீடு செய்ய வேண்டும் என்றார்.

அபாய வலயங்களில் உள்ள காணிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக மாற்றத் தீர்மானித்தால், அனுமதிப்பத்திரம் கொண்ட அக்காணிகளின் பெறுமதியை மதிப்பீடு செய்து, உரிமையாளர்களுக்கு நட்டஈடு அல்லது மாற்றுக் காணி ஒன்றை வழங்கக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் தயாராக உள்ளது.

இதற்கமைய, சம்பந்தப்பட்ட காணிகள் தொடர்பான தகவல்களை அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களிடமிருந்து கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சில குடியிருப்பாளர்கள் அரச காணிகளில் அத்துமீறித் தங்கியிருப்பதுடன், அவர்கள் தொடர்பாகவும் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க அத்திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

இது குறித்து ஏற்கனவே அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள காணி அலுவலகங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகக் காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராச்சி மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...