articles2FVCJGuEkoPbB9Y2NvQE6p
உலகம்செய்திகள்

பெலாரஸ் பலூன்களால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்: லித்துவேனியா அவசரநிலை அறிவிப்பு!

Share

பெலாரஸ் நாட்டிலிருந்து வரும் பலூன்களால் ஏற்படும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லித்துவேனியா நாடு தழுவிய தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது.

லித்துவேனியா உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பெலாரஸ் நாட்டிலிருந்து வரும் பலூன்கள் லித்துவேனியாவுக்குள் நுழைந்ததால், தலைநகர் வில்னியஸ் (Vilnius) விமான நிலையம் மூடப்பட்டது.

இந்த ஊடுருவல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால், அவசரநிலை அறிவிக்கப்படுகிறது.

இந்த அவசரநிலை காரணமாக, எல்லைப் பகுதிகளில் பொலிஸ், எல்லைப் பாதுகாப்புப் படையுடன் இராணுவம் இணைந்து செயற்பட அனுமதி கிடைக்கும். தேடுதல், கைது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவத்துக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் பெலாரஸில் இருந்து சுமார் 600 பலூன்கள் மற்றும் 200 ட்ரோன்கள் லித்துவேனியாவுக்குள் ஊடுருவின. இதனால் 350 விமானங்கள் தாமதமாகியுள்ளதோடு 51,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

பொருளாதார இழப்பு: வில்னியஸ் விமான நிலையம் 60 மணி நேரம் மூடப்பட்டதனால் 7.5 இலட்சம் யூரோ (750,000 Euros) இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...