‘தித்வா’ சூறாவளியால் (Ditwa Cyclone) பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு வத்திக்கான் ஆதரவளிக்குமென, பாப்பரசர் பதினான்காம் லியோ (Pope Leo XIV) உறுதியளித்துள்ளதாக, கொழும்பிலுள்ள வத்திக்கான் தூதரகத்தின் பொறுப்பாளர் மொன்சிஞ்ஞோர் ரொபேர்டோ லூச்சினி (Monsignor Roberto Lucini) அடிகளார் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமது துக்கத்தை வெளிப்படுத்துமாறும், கடினமான இத்தருணத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாகவும் போப் ஆண்டவர் லியோ தமக்குத் தெரிவித்ததாக அடிகளார் லூச்சினி தெரிவித்துள்ளார்.
இயற்கை அனர்த்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில், நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் நம்பிக்கையுடனும், உறுதியுடனும் செயற்படுமாறு போப் ஆண்டவர் இலங்கை மக்களைக் கேட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.