images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

Share

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக் கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக 99 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் விடுவிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வியாழக்கிழமை (டிசம்பர் 11) இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பெரஹர மாவத்த, கொள்ளுப்பிட்டி, கொழும்பு 03 இல் அமைந்துள்ள 02 றூட் 23.1 பேர்ச்சர்ஸ் காணித்துண்டு.

முந்தைய அங்கீகாரம் இரத்து: வதிவிட வசதிகள் உள்ளிட்ட கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக இக்காணியை விடுவிக்க 2024.09.13 அன்று அங்கீகாரம் வழங்கப்பட்டபோதும், குறித்த முதலீட்டாளர் விடுவிப்பு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாததால், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தரப் பேச்சுவார்த்தைக் குழுவின் விதந்துரையின் பேரில் முந்தைய குத்தகை இரத்து செய்யப்பட்டது.

பொருத்தமான அபிவிருத்திப் பணிக்காக இக்காணியை விடுவிப்பதற்காக மீண்டும் முதலீட்டு முன்மொழிவுகளைக் கோருவதற்கு 2025.09.04 அன்று நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமைத்துவ சபை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் பரிந்துரையின் பேரில், பின்வரும் புதிய நிபந்தனைகளின் அடிப்படையில் முதலீட்டு முன்மொழிவுகளைக் கோர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது:

காணியின் அளவில் 50% வீதம் உயர்ந்தபட்சம் பயன்படுத்தப்படலாம். ஏனைய பகுதியைப் ஹோட்டல் அல்லது வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்காக முதலீட்டு முன்மொழிவுகளைக் கோரலாம்.

இதற்கமைய, அரச பிரதம விலைமதிப்பீட்டாளரின் மதிப்பீட்டுக்கமைய, குறித்த காணியை 99 வருடங்களுக்குக் குத்தகைக்கு விடுவிப்பதற்கு சர்வதேச போட்டி விலைமுறி முறைமையின் கீழ் முன்மொழிவுகளைக் கோருவதற்காகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை இறுதி அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...