images 7 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முத்தையன்கட்டு அணையில் திருத்த வேலைகள்; அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை: வதந்திகளை நம்ப வேண்டாம்!

Share

முத்தையன்கட்டு அணையின் வால் கட்டு (Tail end/Sluice Gate area) அருகில் தற்போது சிறிய அளவிலான திருத்தப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அணைக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை எனவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு (DDMCU) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பரவும் வதந்தி: சமூக ஊடகங்களில் “முத்தையன்கட்டு அணையில் சேதம்” என்ற தவறான வதந்தி பரவி வருகிறது.

அதிகாரபூர்வ அறிவிப்பு: இந்தத் தகவல் முற்றிலும் தவறானது எனவும், அணையில் எந்தவிதமான சேதமும் இல்லை எனவும், வால் கட்டுக்கு அருகில் சிறிய திருத்தப் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன எனவும் DDMCU தெரிவித்துள்ளது.

இந்த அத்தியாவசிய திருத்தப் பணியில் நீர்ப்பாசனத் திணைக்களம், பாதுகாப்புப் படைகள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு பொது மக்களிடம் பின்வரும் வேண்டுகோளை விடுத்துள்ளது:

“பதற்றம் அடைய வேண்டாம், வதந்திகளை நம்ப வேண்டாம். எந்தவொரு ஆபத்தான சூழ்நிலையும் ஏற்பட்டால், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு (DDMCU) அதிகாரப்பூர்வமாக உடனடியாகத் தகவல் வழங்கும்.”

Share
தொடர்புடையது
images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் – நாமல் புதிய கூட்டணி? ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சு முறிந்தால் மாற்றுத் திட்டத்திற்கு தயார்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB)...

26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...