தாய்லாந்துடனான சமீபத்திய எல்லை மோதலில் கம்போடியாவில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் இன்று (டிசம்பர் 9) தெரிவித்துள்ளனர்.
மோதல்களின் விளைவாக 7 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர். அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக 20,000 பேர் வரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கோயில் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் அழிவடைந்துள்ளதுடன், பொதுச் சேவைகளும் சீர்குலைந்துள்ளதாகக் கம்போடிய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மோதலின்போது, கம்போடியப் படைகள் தங்கள் துருப்புக்களைத் தாக்கி வருவதாகவும், மேலும் குண்டுவீச்சு ட்ரோன்கள் மற்றும் காமிகேஸ் ட்ரோன்களைப் பயன்படுத்துவதாகவும் தாய்லாந்து இராணுவத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.