நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து இன்று (09) சுமார் 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள கொள்வனவாளர்களுக்கு பெரும் தேவை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மரக்கறிகள் அனுப்பிவைக்கப்பட்டதாக நுவரெலியா பொருளாதார மையத்தின் முகாமையாளர் தெரிவித்தார்.
நேற்றைய தினமும் (08) 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டதாகவும், இது மொத்த வர்த்தகர்களிடமிருந்து நிலையான கேள்வியைக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.
மேலும் நுவரெலியா பொருளாதார மையத்தில் 1Kg கோவா 150 ரூபாவாகவும், கரட் 190 ரூபாவாகவும், 1Kg லீக்ஸ் 190 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
அத்துடன் 1Kg பீட்ரூட் 230 ரூபாவாகவும், 1Kg உருளைக்கிழங்கு 260 ரூபாவாகவும், 1Kg சிவப்பு உருளைக்கிழங்கு 280 ரூபாவாகவும் காணப்படுவதாக நுவரெலியா பொருளாதார மையத்தின் முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.