25 69355e9eb6cdf
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம்: சாட்டிலைட் உரிமை ரூ. 40 கோடிக்கு விற்பனையா? – தகவல் வெளியீடு!

Share

நடிகர் விஜய்யின் கடைசி படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரவிருக்கும் 2026 ஜனவரி 9ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தளபதி விஜய்யின் கடைசிப் படம் என்பதால், இப்படத்தைத் திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ப்ரீ பிசினஸ் பட்டையைக் கிளப்பி வருகிறது. இதுவரை நடந்த ப்ரீ பிசினஸ் மட்டுமே சுமார் ரூ. 500 கோடி இருக்கும் எனத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ப்ரீ பிசினஸ் இவ்வளவு பெரிய தொகையை எட்டியிருந்தாலும், இதுவரை இப்படத்தின் சாட்டிலைட் உரிமை விற்பனை ஆகாமல் இருந்தது.

இந்த நிலையில், ஜீ நிறுவனம் ‘ஜனநாயகன்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும், ரூ. 40 கோடிக்குச் சாட்டிலைட் உரிமையை ஜீ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும், இந்தத் தகவல் எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...