பிரித்தானியாவில் மருத்துவராகப் பணியாற்றிவந்த ஒருவர், 13 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் உட்பட 38 நோயாளிகளிடம் அத்துமீறியதாக அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்திலுள்ள பர்மிங்காமைச் சேர்ந்த நத்தானியேல் ஸ்பென்சர் (Nathaniel Spencer – 38) என்னும் மருத்துவர். 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தக் குற்றச் செயல்களை அவர் செய்துள்ளார்.
13 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை 38 நோயாளிகள் அவரிடம் அத்துமீறலுக்கு ஆளாகியுள்ளனர்.பாலியல் தாக்குதல், வன்புணர்வுக் குற்றச்சாட்டுகள், 13 வயதுக்குக் குறைவான பிள்ளைகளிடம் அத்துமீறியது உட்பட மொத்தம் 45 குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிரித்தானியாவில் மருத்துவராகப் பணிபுரிய அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணை: அவர் அடுத்த மாதம், அதாவது, 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.