25 6933c41f290ff
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்புச் சிறைக்கைதிகள் தங்கள் உணவை வெள்ள நிவாரணத்திற்காக நன்கொடையாக வழங்கினர்!

Share

நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக, மட்டக்களப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் மனிதாபிமான உணர்வுடன் ஒரு முன்மாதிரியான பணியைச் செய்துள்ளனர்.

தமது இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவை நன்கொடையாக வழங்கிய சிறைக்கைதிகள், அதனை உலர் உணவுப் பொருட்களாக மாற்றி நேற்று (டிசம்பர் 5) உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளனர்.

இந்த உணவுப் பொருட்கள் சிறைக் கைதிகளின் ஊடாகச் சிறைச்சாலை அத்தியட்சகரிடம் வழங்கப்பட்டன. பின்னர், இந்த உலர் உணவுப் பொதிகளைச் சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜிடம் கையளித்தார்.

சிறைக் கைதிகள், தாம் சிறைக்குள் இருந்தபோதும் சமூகத்தின் மீதும் பாதிக்கப்பட்ட மக்கள் மீதும் கொண்டிருந்த கரிசனையை இந்த நன்கொடை வெளிப்படுத்துவதாக அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...