கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்கப் பாடகி கேட்டி பெர்ரி இடையேயான காதல் உறவு தொடர்பான வதந்திகள் மீண்டும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன. அண்மையில் வெளியான ஒரு புகைப்படம் இந்த வதந்தியை மேலும் தீவிரமடையச் செய்துள்ளது.
அண்மையில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஃபுமியோ கிஷிதா தன் மனைவியுடன் சேர்ந்து, ட்ரூடோ மற்றும் பெர்ரியுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
அந்தப் பதிவில், கிஷிதா பாடகி கேட்டி பெர்ரியை, ஜஸ்டின் ட்ரூடோவின் “பங்காளர்” (Partner) எனக் குறிப்பிட்டது கனடியர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரூடோவும் அந்தப் பதிவை மீண்டும் பகிர்ந்து, “கேட்டி மற்றும் நான் உங்களுடனும் யுகோவுடனும் அமர்ந்து பேச வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கேட்டி பெர்ரியும் கடந்த ஜூன் மாதம் நடிகர் ஓர்லாண்டோ ப்ளூமுடன் தனது 10 வருட உறவை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
ட்ரூடோ சுமார் 12 ஆண்டுகள் லிபரல் கட்சிக்குத் தலைமை தாங்கிய பின்னர், 2025ஆம் ஆண்டு ஜனவரியில், கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வுகள் காரணமாக, இந்த இரு பிரபலங்களின் தனிப்பட்ட உறவு குறித்த ஊகங்கள் சமூக ஊடகங்களில் சூடுபிடித்துள்ளன.