images 4 1
இலங்கைசெய்திகள்

டித்வா புயல் பேரழிவு: சி.டி ஸ்கேன் உட்பட 3 பெரிய மருத்துவமனைகள் சேதம் – 100 சிறிய மருத்துவமனைகள் பாதிப்பு!

Share

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் அனர்த்தங்களால் நாட்டின் மூன்று பெரிய மருத்துவமனைகளும், சுமார் 100 சிறிய மருத்துவமனைகளும் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

சிலாபம் ஆதார மருத்துவமனை (Chilaw Base Hospital), மஹியங்கனை மற்றும் வத்தேகம மருத்துவமனைகள் ஆகிய மூன்று மருத்துவமனைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. 100 சிறிய மருத்துவமனைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சிலாபம் மருத்துவமனையிலுள்ள சி.டி ஸ்கேன் இயந்திரம் உட்பட அனைத்து முக்கிய மருத்துவ உபகரணங்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதனால், குறித்த மருத்துவமனையில் தற்போது வெளிநோயாளர் பிரிவுக்கான சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சேதங்கள் குறித்து உத்தேச மதிப்பீடு இன்னும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இந்தச் சூழ்நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் (WHO), தேசிய சுகாதார மேம்பாட்டு நிதிக்கு 53 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

பேரழிவுக்குப் பின்னர் தற்காலிகப் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் சுகாதாரத் தேவைகள் குறித்துச் சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...