25 69316e1e1a0b5
உலகம்செய்திகள்

டொன்பாஸை பலவந்தமாகவேனும் கைப்பற்றுவோம்: உக்ரைனுக்குப் புட்டின் மீண்டும் எச்சரிக்கை!

Share

உக்ரைனுக்குச் சொந்தமான டொன்பாஸ் (Donbas) பிராந்தியத்தை பலவந்தமாகவேனும் கைப்பற்றப் போவதாகவும், அதனால் உக்ரைன் இராணுவம் கிழக்கு டொன்பாஸ் பிராந்தியத்திலிருந்து வெளியேற வேண்டும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீண்டும் ஒருமுறை உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்சமயம் இந்தியாவில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி புட்டின், அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாகத் தமக்கு பாதகமான அனைத்து சமரசங்களையும் நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“நாங்கள் டொன்பாஸை பலவந்தமாகப் பெறுவோம். அவ்வாறு நடக்காமல் இருக்க உக்ரைன் இராணுவம் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும்,” என அவர் கூறினார்.

தற்போது டொன்பாஸில் சுமார் 85% ரஷ்யாவினால் நிர்வகிக்கப்படுகிறது. அதன் கிழக்குப் பகுதியில் மாத்திரமே உக்ரைன் இராணுவம் நிலைகொண்டுள்ளது.

எவ்வாறாயினும், உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கி தமது நிலத்தை விட்டுக்கொடுப்பதை நிராகரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...