25 6932433e231cb
சினிமாபொழுதுபோக்கு

கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’: 7 நாட்களில் உலகளவில் ரூ. 4 கோடி வசூல்!

Share

ஜே. கே. சந்துரு இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து கடந்த நவம்பர் 28ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ரிவால்வர் ரீட்டா’.

இப்படத்தில் ராதிகா சரத்குமார், சுனில், ரெடிங் கிங்ஸ்லி, சென்ட்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

கீர்த்தி சுரேஷ் முதன்மை வேடத்தில் நடித்திருந்ததால், இப்படத்தின் மீது பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை.

இதனால் ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பின்னடைவைச் சந்தித்தது. வெளியான 7 நாட்களில் இப்படம் உலகளவில் சுமார் ரூ. 4 கோடி வசூல் செய்துள்ளது.

இந்தத் தொகை கிட்டத்தட்ட இப்படத்தின் இறுதி வசூலாக இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
04 16
பொழுதுபோக்குசினிமா

ஆஸ்கர் மேடையில் தமிழ் மின்னல்: ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த சரித்ரா சந்திரன்!

ஹொலிவூட் திரையுலகின் உயரிய விருதான 2026 ஆஸ்கர் விருது விழா, இந்த ஆண்டு ஒரு தமிழ்...

03 17
பொழுதுபோக்குசினிமா

சர்ச்சைகளும் நெகிழ்ச்சியும்: மீண்டும் வைரலாகும் நடிகர் பார்த்திபனின் மேடைப் பேச்சு!

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், தனது தனித்துவமான பேச்சால் எப்போதும் சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்குபவர். சமீபத்தில்...

29 7
சினிமாபொழுதுபோக்கு

அஜித் குமாரின் ‘AK 64’: படப்பிடிப்பு தாமதம் – கார் பந்தயத்தில் கவனம் செலுத்தும் நடிகர்!

நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படமான ‘AK 64’ குறித்த அறிவிப்புக்காகவும், படப்பிடிப்புத் தொடக்கம் குறித்தும் ரசிகர்கள்...

29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...