Ajith Shalini 2025 04 ae4c1f23ef3f86b59670148ee6e0829c 3x2 1
சினிமாபொழுதுபோக்கு

அஜித்துக்கு ‘ஜென்டில்மேன் ஓட்டுநர்’ விருது: இத்தாலியில் கௌரவம் – ஷாலினி நெகிழ்ச்சி!

Share

நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமாருக்கு இந்தாண்டின் ‘ஜென்டில்மேன் ஓட்டுநர்’ (Gentleman Driver Award) என்ற விருது இத்தாலியில் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனை குறித்து அஜித்தின் மனைவி ஷாலினி நெகிழ்ச்சியுடன் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தாண்டுக்கான ‘ஜென்டில்மேன் ஓட்டுநர்’ விருது. பிலிப் சாரியட் மோட்டார்ஸ்போர்ட் (Philippe Charriol Motorsport). இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் இந்த விருது அஜித்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் சினிமாவைத் தாண்டி தனக்குப் பிடித்த கார் பந்தயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வரும் நிலையில், இந்த விருது அஜித்தின் ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் பெருமை சேர்த்துள்ளது.

இந்த விருது குறித்து அவரது மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டு, நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளதாவது:

“தொழில்முனைவோர், கார் ரேஸராக இருந்த பிலிப்பே சாரியோல் சார்பாக வெனிஸில் வழங்கப்படும் இந்தாண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது வென்ற எனது கணவரின் பக்கத்தில் நிற்கப் பெருமைப்படுகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஜித்தின் அணி ஐரோப்பாவில் நடைபெற்ற கார் பந்தயத்திலும் சமீபத்தில் சாதனை படைத்தது. சமீபத்தில், அஜித் இந்தியாவின் பத்ம பூஷன் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

இப்படித் தொடர்ச்சியாக விருதுகளை வாங்கிக் குவிக்கும் அஜித்தால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அஜித் குமார் அடுத்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 64 படத்தில் நடிக்கவிருக்கிறார்.

Share
தொடர்புடையது
kamal 55 1
பொழுதுபோக்குசினிமா

உலக நாயகன் பெயரையோ, புகைப்படத்தையோ வணிக ரீதியாகப் பயன்படுத்தத் தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படம், பட்டங்கள் மற்றும் அவரது சினிமா வசனங்களை அவரது அனுமதியின்றி வணிக...

nayanthara in
பொழுதுபோக்குசினிமா

டொக்சிக் படத்திற்காக யஷ் மற்றும் நயன்தாராவிற்கு வழங்கப்பட்ட பிரம்மாண்ட சம்பளம்!

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் KGF பட புகழ் யஷ் நடிப்பில் படு பிரம்மாண்டமாக தயாராகும் படம்...

Image
பொழுதுபோக்குசினிமா

2-வது பாதியில் ரவி மிரட்டியிருக்கிறார்: பராசக்தி படத்தைப் பார்த்துவிட்டு கெனிஷா நெகிழ்ச்சிப் பேட்டி!

சுதா கொங்கரா இயக்கத்தில், பொங்கல் வெளியீடாக இன்று திரைக்கு வந்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தில், நடிகர் ஜெயம்...

G H8X3taYAAnFzC
பொழுதுபோக்குசினிமா

டொக்சிக் படக் காட்சியால் கிளம்பிய சர்ச்சை: விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த இயக்குனர் கீது மோகன்தாஸ்!

கன்னடத் திரையுலகின் ‘ராகிங் ஸ்டார்’ யஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட ‘டொக்சிக்’ (Toxic) படத்தின்...