கண்டி – கீழ் கடுகண்ணாவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. அத்துடன், இடிபாட்டுக்குள் சிக்குண்டிருந்த மேலும் நான்கு பேர் தற்போது மாவனெல்ல ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கண்டி – கீழ் கடுகண்ணாவ பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் மற்றும் குடியிருப்பு மீது, நேற்று (நவம்பர் 22) காலை மண்மேடு சரிந்து வீழ்ந்தது.
இதனையடுத்து, இடிபாட்டுக்குள் சிக்குண்டவர்களைத் தேடும் பணிகள் சுமார் 10 மணிநேரம் நீடித்தன.
இந்தநிலையில், ஆபத்தான சூழ்நிலை காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ முதல் மாவனெல்ல வரையான பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.