images 3
இலங்கைசெய்திகள்

திருக்கோணேஸ்வரம் ஆலய மின்பிறப்பாக்கி இடத்தை வர்த்தக நிலையத்துக்கு வழங்க தொல்பொருள் திணைக்களம் வலியுறுத்தல்: பக்தர்கள் கடும் விசனம்!

Share

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் மின்பிறப்பாக்கி (Generator) வைக்கப்பட்டிருந்த இடத்தை, தனிப்பட்ட நபர் ஒருவர் வர்த்தக நிலையம் நடத்த வழங்குமாறு ஆலய நிர்வாகத்திற்குச் தொல்பொருள் திணைக்களம் கடிதம் அனுப்பியுள்ளது. இந்தக் கடிதம் ஆலய பக்தர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோணேஸ்வரம் ஆலயச் சூழலில் அத்துமீறி வர்த்தக நிலையம் ஒன்றை அமைத்தவரின் கடையை, ஆலய நிர்வாக சபையினர் சுமார் 7 மாதங்களுக்கு முன்னர் அகற்றினர்.

இதைத் தொடர்ந்து, அந்த நபர் நிர்வாக சபைக்கு எதிராகக் காவல்துறையிலும், தொல்பொருள் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்திருந்தார்.

காவல்துறையினரால் இந்த விவகாரம் தொல்பொருள் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், “ஆலயப் பகுதியில் வர்த்தக நிலையம் அமைக்கத் தாம் அனுமதி வழங்கியுள்ளதால், அவர் அதனை அமைக்க நிர்வாக சபையினர் மின்பிறப்பாக்கி வைத்துள்ள பகுதியை வழங்கும்படி” நவம்பர் 7ஆம் திகதியிட்டுத் தொல்பொருள் திணைக்களம் ஆலய நிர்வாகத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

ஆலய வளாகத்தில் காண்டாமணி பொருத்த ஒரு மணிக்கோபுரம் அமைக்க நிர்வாகசபை அனுமதி கேட்டும் தொல்பொருள் திணைக்களம் அனுமதியளிக்காத நிலையில், நிர்வாக சபை மின்பிறப்பாக்கிக்கு கூரை அமைக்க விண்ணப்பித்தும் அனுமதி வழங்காத நிலையில்,

இடிந்து விழும் நிலையிலுள்ள கோணேஸ்வர வாகன தரிப்பிடத்தை செப்பனிட அனுமதி கேட்டும் அதற்கு அனுமதிக்கப்படாத நிலையில், ஆலய பூசகரின் தங்குமிடத்தை சிறிது விரிவுபடுத்துவதற்கு அனுமதி தரப்படாத நிலையில்,

தனிப்பட்ட நபர் கோயில் வளாகத்தில் கட்டடம் அமைக்க தொல்பொருள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளமை குறித்து ஆலய பக்தர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...