images 2 8
பொழுதுபோக்குசினிமா

நடிகை துளசி திடீர் அறிவிப்பு: டிசம்பர் 31க்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு

Share

பிரபல நடிகை துளசி (Tulasi) ஒரு முக்கியமான முடிவை அறிவித்துள்ளார். வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் நடிப்பை விட்டு விலகி, முழுமையாக ஆன்மீகப் பாதையில் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1967ஆம் ஆண்டு பிறந்த நடிகை துளசி, தமிழ், தெலுங்கு, கன்னடம், போஜ்பூரி உள்ளிட்டப் பல மொழிகளில் 300இற்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் ‘அரங்கேற்றம்’ எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் அவரது மகளாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த அவர், ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘மங்காத்தா’, ‘சர்கார்’, ‘ஆம்பள’, ‘வீரமே வாகை சூடும்’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘சபாநாயகன்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்துள்ளார்.

பல தசாப்தங்களாகத் திரையுலகில் பயணித்த நடிகை துளசி, புத்தாண்டில் இருந்து நடிப்பை விட்டு விலகிச் சமய மற்றும் ஆன்மீகச் செயல்பாடுகளில் ஈடுபட முடிவெடுத்திருப்பது திரையுலக ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...