தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழும் கீர்த்தி சுரேஷ், ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல நிதியமான யுனிசெஃப் (UNICEF) உடைய இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் குறித்துக் கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“குழந்தைகள் தான் நமது மிகப்பெரிய எதிர்கால நம்பிக்கை, அவர்கள் மீது அன்பு செலுத்தி சிறந்தவர்களாக உருவாக்குவதற்குத் தேவையான அடித்தளத்தை மேம்படுத்த வேண்டியது நமது கடமை. UNICEF இந்தியா அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
உலகின் 190 நாடுகளில் செயல்பட்டு வரும் யுனிசெஃப் அமைப்பு, சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு உரிமைகள் குழந்தைகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்யப் பணியாற்றி வருகிறது.
இதற்கு முன்னரும் யுனிசெஃப் இந்தியாவின் தூதர்களாகப் பல திரைப் பிரபலங்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.