MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் தாழ்வுபாடு கடலில் படகுகள் மோதல்: ஒரு படகு மூழ்கியது – மீனவர் வைத்தியசாலையில்!

Share
  1. மன்னார் தாழ்வுபாடு மீன்பிடித் துறையில் இருந்து நேற்று (நவ 15) இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் படகுடன், கடலில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிய மற்றுமொரு மீனவரின் படகு மோதியதில் இரண்டு படகுகளும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.

இந்தக் கடற்பரப்பு விபத்து தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து சுமார் 150 மீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு படகு கரை திரும்பிய நிலையில், மற்றைய படகு கடலில் மூழ்கியது. மூழ்கிய படகு பின்னர் மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடலில் மூழ்கிய படகில் பயணித்த மீனவர் ஒருவர் இன்று (நவம்பர் 16) காலை சிகிச்சைகளுக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான சம்பவங்களைத் தொடர்ந்து மேலும் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது:

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற மீனவர் தொழிலுக்குச் சென்ற மீன்பிடிப் படகின் வெளி இணைப்பு இயந்திரம் அவரது மீன் வாடியில் வைக்கப்பட்டிருந்தது. விபத்தில் தமது படகு சேதமடைந்ததாகத் தெரிவித்த மற்றைய படகின் மீனவர்கள், குறித்த வாடியின் கதவை உடைத்து அந்த வெளி இணைப்பு இயந்திரத்தை எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான இரண்டு படகுகளின் உரிமையாளர்களும் குறித்த விபத்து குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அத்துடன், வெளி இணைப்பு இயந்திரம் திருட்டுப் போனது குறித்தும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் பொலிஸார் இரண்டு சம்பவங்கள் குறித்தும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...