MediaFile 11
இலங்கைசெய்திகள்

IMF கடன் திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு: நிறைவேற்று சபை அடுத்த சில வாரங்களில் கூடும் – 2026 வரவு செலவுத் திட்டம் ஆய்வு!

Share

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் (EFF) ஐந்தாவது மதிப்பாய்வைக் கருத்தில் கொள்ளும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை அடுத்த சில வாரங்களில் கூடும் என IMF இன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசெக் (Julie Kozack) தெரிவித்துள்ளார்.

IMF தலைமையகத்தில் நேற்று (நவம்பர் 13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை உறுதிப்படுத்தினார்.

“கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி, இலங்கைக்கான IMF நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு தொடர்பில் IMF பணியாளர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் பணியாளர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது.”

இந்த இணக்கப்பாடு IMF இன் நிறைவேற்று சபையினால் அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர், இலங்கைக்கு சுமார் 347 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவிக்கான அணுகல் கிடைக்கும்.

“இதற்காக நிறைவேற்று சபை அடுத்த சில வாரங்களில் கூடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று ஜூலி கோசெக் தெரிவித்தார்.

“2026 வரவுசெலவுத் திட்டம் IMF திட்டத்தின் அளவுருக்களுடன் (parameters) இணங்குகிறதா என்பதைத் தீர்மானிக்க, எமது பணியாளர்கள், வெளியிடப்பட்ட வரவு செலவுத் திட்ட ஆவணங்களை தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.”

“இந்த மதிப்பீடு நிறைவேற்று சபையின் ஆய்வுக்காக மிகவும் முக்கியமானது. இதுவும் அடுத்த சில வாரங்களுக்குள் நடக்கும்,” என அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், மறுசீரமைப்பைப் பொறுத்த வரையில், அவை இலங்கையின் திறனை மேலும் அதிகரிப்பதற்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Share
தொடர்புடையது
12 4
செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவில் போர் நிறுத்த முயற்சி முறியடிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...