images 3 5
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு: நுரைச்சோலை காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக ஒலிப்பதிவுகள் வெளியீடு – விசேட விசாரணை ஆரம்பம்!

Share

புத்தளம், நுரைச்சோலை காவல்நிலைய பொறுப்பதிகாரி, அந்தப் பகுதியில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

போதைப்பொருள் விற்பனைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பொறுப்பதிகாரி தொலைபேசியூடாகக் கலந்துரையாடும் ஒலிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அதேபோன்று, மற்றுமொரு போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, குறித்த காவல்நிலைய பொறுப்பதிகாரி உதவிகள் கோரும் ஒலிப்பதிவுகளும் பகிரப்படுகின்றன.

இந்த விடயம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியூதின் நேற்று பாராளுமன்றத்தில் தகவல்களை முன்வைத்தார்.

இதற்குப் பதிலளித்த பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு ரிஷாட் பதியூதினைக் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், காவல்நிலைய பொறுப்பதிகாரி மீதான இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகக் காவல்துறையின் பேச்சாளரிடம் வினவியபோது, அவர் பின்வரும் தகவலைத் தெரிவித்தார்:

“குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறை மாஅதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்தச் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.”

Share
தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...