1500x900 40493351 auto
சினிமாபொழுதுபோக்கு

நாளை திரைக்கு வரும் படங்கள்: எம்.கே.டி.யின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘காந்தா’ உட்பட 6 புதிய படங்கள், ‘ஆட்டோகிராஃப்’ ரீ-ரிலீஸ்!

Share

தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள புதுப்படங்கள் மற்றும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற படங்களின் ரீ-ரிலீஸ் என நாளை திரைக்கு வரவுள்ள படங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, தமிழில் நாளை (14) 6 திரைப்படங்களும், ஒரு படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் திரைப்படமும் திரைக்கு வரவுள்ளது.

அவை குறித்த விபரங்களைக் கீழே பார்க்கலாம்.

காந்தா

துல்கர் சல்மான் ‘காந்தா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார்.

இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும்.

இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மதராஸ் மாஃபியா கம்பெனி

அறிமுக இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மதராஸ் மாஃபியா கம்பெனி’.

வடசென்னை பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஆனந்தராஜ் தாதா வேடத்தில் நடித்துள்ளார்.

ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் கதைக்களத்துடன் படம் உருவாகி உள்ளது.

படத்தில் பிக் பாஸ் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிணறு

இயக்குநர் ஹரிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிணறு’.

இப்படத்தில், விவேக் பிரசன்னா, கனிஷ்குமார், மனோஜ் கண்ணன், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

புவனேஷ் செல்வனேசன் இசையமைத்திருக்கிறார்.

கிராமத்துச் சிறுவர்கள் கிணற்றில் நீராட வேண்டும் என்ற உளவியல் ரீதியிலான ஆசையை மையப்படுத்தி திரைப்படம் உருவாகியுள்ளது.

தாவூத்

இயக்குவர் பிரசாந்த் ராமன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் தாவூத்.

ஒரு தமிழ் நகைச்சுவை-குற்றம் சார்ந்த திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இதில் லிங்கா, சாரா ஆச்சார், ராதா ரவி, ஷா ரா, சாய் தீனா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாய் ஸ்லீப்பர் செல்

கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ள படம் ‘பாய் ஸ்லீப்பர் செல்ஸ்’.

கே ஆர் எஸ் பிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார். கதாநாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷாவும் வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது.

சூதாட்டம்

இயக்குனர் சரவணன் ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சூதாட்டம்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சரண்யா மற்றும் சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆட்டோகிராஃப்

கடந்த 2004 ஆம் ஆண்டு சேரனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப்.

இப்படம் 21 ஆண்டுகள் கழித்து நாளை ரீ-ரிலீஸ் ஆகிறது.

Share
தொடர்புடையது
images
சினிமாபொழுதுபோக்கு

தெலுங்கு இயக்குநர் மீது நடிகை திவ்யபாரதி பாலியல் ரீதியான அவமதிப்புக் குற்றச்சாட்டு: நடிகர் மௌனம் கலைந்தது ஏன்?

சமீபத்தில் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் நடித்த நடிகை திவ்யபாரதி, தெலுங்கில் தான் அறிமுகமாகும் ‘கோட்’...

Keerthy Suresh white saree 4 1738660296537 1738660296714
சினிமாபொழுதுபோக்கு

துபாய், அமெரிக்கா போல இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை; சட்டங்கள் மாற வேண்டும்” – நடிகை கீர்த்தி சுரேஷ் ஆதங்கம்!

இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாகவே இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். துபாய், அமெரிக்கா...

125086256
சினிமாபொழுதுபோக்கு

தைரியம் இருந்தால் டி.என்.ஏ. டெஸ்டுக்கு வாங்க கணவரே!’ – சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மனைவி பகிரங்க சவால்!

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர்...

Sandy Master plays the female role
சினிமாபொழுதுபோக்கு

சுமார் மூஞ்சி குமாருக்குப் பதிலாக சாண்டி மாஸ்டர்? ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’ உருவாகிறது!

விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’...