தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று வியாழக்கிழமை (நவம்பர் 13) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
நாரஹேன்பிட்டிய பகுதியில் ஒரு குழுவினர், தான் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொய்யான முறைப்பாடு அளித்த சம்பவத்தில் துசித ஹல்லொலுவ சந்தேக நபராகப் பெயரிடப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கு இன்று வியாழக்கிழமை (நவ13) விசாரணைக்கு வந்தபோது, சந்தேகநபர் துசித ஹல்லொலுவ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாகவே, நீதவான் அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்துள்ளார்.