tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

Share

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இன்று குருவின் அமைப்பும், குருவின் அருள் நிறைந்த நாளில் உருவாகும் ஹன்ஸ்ராஜ் யோகத்தால் நன்மைகள் சேரும். இன்று மேஷம், சிம்மம் உள்ளிட்ட ராசிகளுக்கு வாழ்க்கையில் சுப பலன்கள் அதிகரிக்கும். இன்று அமிர்த யோகம் உள்ளது. மகரம் ராசியில் உள்ள பூரம், உத்திரம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது.

மேஷ ராசி பலன்
இன்று குடும்பம் மற்றும் பணியிட சூழல் இனிமையாக இருக்கும். உங்கள் தாயுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று நீங்கள் ஒரு பயணம் சில திட்டமிட்டு இருந்தால் அதில் கூடுதல் கவனம் தேவை.இன்று உங்கள் உறவு மேம்படும். பெரியவர்களின் ஆசிர்வாதம் பெறுவீர்கள். புதிய திட்டங்கள் அல்லது வேலையை தற்காலிகமாக நிறுத்துவது நல்லது.

ரிஷப ராசி பலன்
உங்களுடைய காதல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களால் சிரமங்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் வாழ்க்கைத் துணை இடமிருந்து முழு ஆதரவை பெறுவீர்கள். சகோதரர்களுடன் குடும்ப தொழிலை விரிவு படுத்துவது குறித்து விவாதிப்பீர்கள். பயணம் தொடர்பான திட்டங்களில் கவனம் தேவை. அதற்கான தேவையான பொருட்களை சரி பார்க்கவும். இன்று நீங்கள் சில சிரமங்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. உங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்த செலவுகள் அதிகரிக்கும்.

மிதுன ராசி பலன்
இன்று உங்களுடைய உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவீர்கள் . மாலை நேரத்தில் குடும்பத்தினருடன், குழந்தைகளுடன் வேடிக்கையாக பொழுது கழியும். குத்துத தொடர்பான விஷயங்களில் பிரச்சனை தலை தூக்கும். இன்று உங்களுடைய பேச்சு நிதானத்தை கடைபிடிக்கவும். பழைய முதலீடுகள் மூலம் லாபமும் நற்பலனும் கிடைக்கும். உங்களுடைய நிதி நிலை வலுவாக இருக்கும். முக்கிய வணிக விஷயங்களை குறித்து விவாதிப்பீர்கள்.

கடக ராசி பலன்
இன்று உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட உங்கள் வீட்டு வேலைகளை விரைவாக முடிக்க முயற்சிப்பீர்கள் . உங்கள் நண்பர்களுடன் ஒரு சுற்றுலா செல்ல திட்டமிடுவதற்கு. அரசாங்கத் திட்டங்களும் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களுடைய முதலாளியுடன் சில முக்கியமான வேலைகளையும் விவாதிக்கலாம். தொழிலதிபர்களுக்கு இன்று லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்களுடைய குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்ம ராசி பலன்
சமூகப் பணிகளில் உங்கள் புகழ் அதிகரிக்கும். இதன் மூலம் உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். உங்கள் சகோதரியின் திருமணத்தைப் பற்றி உங்களுக்கு இருக்கக்கூடிய கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இன்று நீங்கள் வணிக ரீதியாகவும் பயணம் செய்ய வேண்டியிருக்கலாம். உங்கள் அண்டை வீட்டாருடன் இன்று தகராறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே உங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பிறரை அனுசரித்து சொல்லவும் அல்லது அவை சட்ட நடவடிக்கைக்கு செல்ல வாய்ப்பு உண்டு. இன்று, மாணவர்களுக்கு உயர்கல்விக்கான பாதை அமையும்.

கன்னி ராசி பலன்
இன்று நீங்கள் வீட்டு பராமரிப்பு மற்றும் அலங்காரங்களுக்கு சிறிது பணம் செலவிடலாம், குடும்பத்தின் தேவைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக குடும்ப உறுப்பினர்களுடன் விவாதிப்பீர்கள் . உங்கள் காதல் வாழ்க்கையில் புதிய சக்தியால் நிறைந்திருக்கும், இது உங்கள் துணையை மகிழ்ச்சியடையச் செய்யும். அரசியலில் ஈடுபடுபவர்கள் இன்று புதிய வாய்ப்புகளைக் காண்பார்கள். இந்த மாலை நேரத்தை உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள். வேலையில் இருப்பவர்கள் இன்று அதிக பணிச்சுமையை எதிர்கொள்ள நேரிடும், ஆனால் உங்கள் கடின உழைப்பால், மாலைக்குள் உங்கள் அனைத்து பணிகளையும் முடிப்பீர்கள்.

துலாம் ராசி பலன்
வியாபாரத்தில் முன்னேற்றம் உங்கள் சமூக வட்டத்தை விரிவுபடுத்தும் மற்றும் உங்கள் நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். அதே சமயம் உங்களுக்கு சில புதிய எதிரிகளும் உருவாகலாம். மாணவர்களின் கல்வியில் உள்ள தடைகள் இன்று முடிவடையும். சொத்து தொடர்பான தகராறுகளை தீர்ப்பதற்கு இன்று உங்களுடைய சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக மாறும். இன்று உங்களுடைய உறவினர்கள் நல்லது நண்பர்களுக்கு விருந்து வைக்க திட்டமிடலாம். இன்று உங்கள் குழந்தையின் திருமண முன்மொழிவை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம்.

விருச்சிகம் ராசி பலன்
இன்று உங்கள் இனிமையான வார்த்தைகள் குடும்ப உறுப்பினர்களை ஈர்க்கும் . குடும்பத் தொழிலை முன்னேற்றுவது குறித்து உங்கள் தந்தையிடம் ஆலோசனை கேட்கலாம்; அவருடைய ஆலோசனை உங்கள் தொழிலுக்கு நன்மை பயக்கும். உங்கள் நிதி நிலைமை வலுவடையும். இன்று யாருக்கேனும் பணம் கொடுக்க வேண்டியிருந்தால், அதை எச்சரிக்கையுடன் செய்யுங்கள். ஏனெனில் இது போன்ற விவகாரங்கள் உறவில் பிளவை ஏற்படுத்தும். இன்று உங்களுடைய பணப் பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை.​

தனுசு ராசி பலன்
உங்கள் குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். இது கொண்டாட்டம் மனநிலையை தரும் . உங்கள் துணையுடன் நடந்து கொண்டிருக்கும் சச்சரவுகள் இன்று முடிவுக்கு வரலாம். உங்கள் உடல்நலத்திலும், உங்கள் பெற்றோரின் நலனிலும் சிறப்பு கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஏதேனும் ஒரு முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால், அதற்கு நல்ல நாளாக இருக்கும். மாலையில் ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். இன்று ஏதேனும் நோய் பிரச்சனை கொடுத்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

மகர ராசி பலன்
வேலை செய்பவர்களுக்கு இன்று அலுவலகத்தில் கூடுதல் பணி சுமை ஏற்படும். இதனால் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியாத சூழல் ஏற்படும், இதனால் குடும்ப உறுப்பினர்கள் வருத்தப்படலாம் . இன்று வாகனங்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. சிலருக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மாலையில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். புதிய படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த நாளை சாதகமாகக் காணலாம். நண்பருக்கு உதவவும் நீங்கள் முன்வரலாம்.

கும்ப ராசி பலன்
இன்று காலையிலேயே உங்கள் மனதில் புத்தணர்ச்சியை நிறைந்திருக்கும் என்பதால் பழைய மற்றும் நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளையும் முடிக்க நீங்கள் தயாராக இருப்பீர்கள் . இன்று ஒரு புதிய திட்டத்தில் வேலை செய்ய திட்டமிட்டால், அது நிறைவேறக்கூடும். உங்கள் மாமியார் மூலம் நிதி நன்மைகளைப் பெறலாம். பிறரிடம் ஏதேனும் பணம் சிக்கியிருந்தால், அது இன்று மீட்க முடியும், இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். உங்கள் குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய நீங்கள் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள்.

மீனம் ராசி பலன்
இன்று உங்கள் மனதிற்கு இதமான நாளாக இருக்கும். இது உங்கள் உறவை வலுப்படுத்தும். இன்று உங்கள் தொழிலில் சரியான திட்டமிடல் தேவை. சில தடை தாமதங்கள் சந்திக்க வாய்ப்பு உண்டு. இது எதிர்காலத்தில் உங்களுக்கு இழப்புகள் ஏற்படக்கூடும். இன்று நடக்கக்கூடிய எந்த ஒரு குடும்ப தகராறுகளும், சிறிது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்கள் தந்தையின் உடல்நலம் குறித்து இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அவருடைய எந்த ஒரு பழைய நோய்களும் மீண்டும் தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் துணைக்கு ஒரு பரிசையும் வாங்கலாம்.

Share

Recent Posts

தொடர்புடையது
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 11 நவம்பர் மாதம் 2025 : 12 ராசிகளுக்கான பலன்கள்

இன்று நவம்பர் 11ம் தேதி, ஐப்பசி மாதம் 25 சந்திர பகவான் கடக ராசியில் சஞ்சாரம்...

MediaFile 1 4
ஜோதிடம்

இன்றைய ராசிப்பலன் – 27.10.2025

மேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களின்...

15563919 rasipalan
ஜோதிடம்

இன்றைய ராசிப்பலன் – 26.10.2025

மேஷம் இன்று உங்கள் ராசிக்கு பகல் 10.46 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்....

MediaFile
ஜோதிடம்

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை)

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை) நாள் : விசுவாசுவ வருடம் வைகாசி தேய்பிறை மாதம்...