images 3 3
செய்திகள்இந்தியா

டெல்லி வெடிப்புச் சம்பவம்: குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் தாக்குதல் நடத்த முக்கிய சந்தேக நபர்கள் திட்டம் – அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்!

Share

டெல்லியில் அண்மையில் நடந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைதான முக்கிய சந்தேக நபர்கள், எதிர்வரும் இந்தியக் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) செங்கோட்டைப் பகுதியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணை வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.

இந்த வழக்கின் முக்கியச் சந்தேக நபரான ஒரு வைத்தியர், காவல்துறையினரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் இந்தத் திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

வெடிப்பு நடப்பதற்கு முன்னரே, தாமும் தமது சகாவான உமர் என்பவரும் இணைந்து செங்கோட்டைப் பகுதியை நோட்டமிட்டதாக அந்த வைத்தியர் தெரிவித்துள்ளார். இது குடியரசு தினத் தாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கடந்த தீபாவளிப் பண்டிகையின்போது மக்கள் அதிகம் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டதாகவும், ஆனால் சில காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

செங்கோட்டையை நோட்டமிட்டதாகக் கூறப்படும் வைத்தியரின் சகாவான உமர் என்பவரே, செங்கோட்டை மெட்ரோ தொடருந்து நிலையம் அருகே சிற்றூந்து வெடித்தபோது உயிரிழந்தவர் என நம்பப்படுவதாகவும் இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்துப் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...