MediaFile 9
செய்திகள்உலகம்

டொனால்ட் ட்ரம்ப் ஆவணப்பட சர்ச்சை: பார்வையாளர்களைத் தவறாக வழிநடத்தியதாகக் குற்றச்சாட்டு – பிபிசி பணிப்பாளர் நாயகம் டிம் டேவி இராஜினாமா!

Share

பிபிசி ஊடக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் டிம் டேவி (Tim Davie) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆவணப்படம் ஒன்றைத் தொகுக்கும்போது பார்வையாளர்களைத் தவறாக வழிநடத்தியதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் காரணமாகவே அவர் பதவி விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டிம் டேவி இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிபிசி ஊடக நிறுவனத்தின் செய்திப் பிரிவின் பிரதானியாகப் பணியாற்றிய டெபோரா டேர்னெஸ்ஸும் (Deborah Turness) இராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிபிசி நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்தில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பதவியில் இருந்து விலகுவதற்கான தமது முடிவு தனிப்பட்ட முடிவு என்று டிம் டேவி குறிப்பிட்டுள்ளார். எனினும், ஆவணப்படச் சர்ச்சையே அவரது விலகலுக்குக் காரணம் என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...