25 6909692213679
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம்: ஐஸ் போதைப்பொருள் மற்றும் வழிப்பறி கொள்ளை – தேடப்பட்டவர் உட்பட 6 பேர் கைது!

Share

யாழ்ப்பாணத்தில் (Jaffna) வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உட்பட மொத்தமாக ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணக் காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இந்த ஆறு பேரையும் கைது செய்து, காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணையின் போது, குறித்த ஆறு பேரில் ஒருவர் யாழ்ப்பாண நகர் பகுதியில் இடம்பெற்ற வழிப்பறிக் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பதனைக் காவல்துறையினர் கண்டறிந்தனர்.

அவரிடம் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளின் போது, கொள்ளையடிக்கப்பட்ட சங்கிலி மற்றும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்துத் தொடர் விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...