25 68d87cfbd40c4
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் ஐஸ், கசிப்பு வியாபாரிகள் கைது: 5 கிராம் ஐஸ், 24 போத்தல் கசிப்பு மீட்பு – பெண்கள் வாக்குவாதம்!

Share

மட்டக்களப்பு தலைமையக காவல்துறையின் பிரிவுக்குட்பட்ட கருவப்பங்கேணி மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 02) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.

காவல்துறை பரிசோதகர் பிரபாத் பெர்ணான்டோ தலைமையிலான தலைமையகக் காவல் நிலைய ஊழல் மற்றும் போதை ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர், கருவப்பங்கேணி பகுதியிலுள்ள பிரபல போதைப் பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது 34 வயதுடைய அந்தப் பிரபல வியாபாரி 5 கிராம் 650 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

காவல்துறையுடன் வாக்குவாதம்: கைது செய்யப்பட்டவரை காவல்துறையினர் கொண்டு செல்ல முயன்றபோது, அங்கு பெண்கள் உட்படச் சிலர் ஒன்றிணைந்து காவல்துறையினரைத் தடுத்து, பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களைத் தாண்டி, காவல்துறையினர் சந்தேகநபரை மீட்டுச் சென்றனர்.

அதேவேளை, திருப்பெருந்துறை பகுதியில் கசிப்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டபோது, கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 56 வயதுடைய ஒருவர் 24 போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.

போதைப் பொருள் வியாபாரியை காவல்துறை தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்காக நீதிமன்ற அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், கசிப்புடன் கைது செய்தவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார மேலும் தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...