நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சோதனைகளின் போது, 1 கிலோகிராம் 202 கிராம், 863 கிராம் 137 மில்லிகிராம், குஷ் (Kush) உள்ளிட்ட பல வகைப் போதைப்பொருட்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 31 சந்தேக நபர்களுக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது. நான்கு பேருக்கு எதிராகச் சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களாக அடையாளம் காணப்பட்ட 8 நபர்களைப் புனர்வாழ்வுக்காக உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.