திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர
சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்னர் திருநெல்வேலி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் உட்பட மூன்று பேர் நேற்று (ஒக் 28) யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வர்த்தக நிலையத்தில் ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடியதாகத் தேடப்பட்ட பிரதான சந்தேக நபர், கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து 160 மில்லிகிராம் ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் காவல்துறையினரால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.