25 68fe267ebcb42
செய்திகள்இலங்கை

பெருந்தோட்டப் பகுதிகளை காடுகளாக்கி மக்களை வெளியேற்றும் சதி: சந்தேகம் எழுப்பும் யட்டியந்தோட்டை பிரதேச சபை உறுப்பினர்

Share

பெருந்தோட்ட பகுதிகளை காடுகளாக்கி அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை பெருந்தோட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருவதாகவும் இதன் மூலம் பெருந்தோட்டங்களுக்கு சம்பந்தம் இல்லாதவர்களை குடியேற்ற திட்டமிடுகின்றார்களா?என்ற சந்தேகம் தனக்கு ஏற்பட்டுள்ளதாக யட்டியந்தோட்டை பிரதேச சபை உறுப்பினர் ஜி.ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “யட்டியந்தோட்டை பிரதேசத்திற்கு உட்பட்ட பெருந்தோட்ட கம்பனிகள் தங்களுடைய பெருந்தோட்ட பகுதிகளை உரிய முறையில் பராமரிக்காமையின் காரணமாக தற்பொழுது அந்த காணிகள் அனைத்தும் காடுகளாக மாறியிருக்கின்றன.

இதன் காரணமாக பெருந்தோட்ட மக்கள் அந்த பகுதிக்கு வேலைக்கு செல்ல முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் தற்பொழுது அதிக அளவில் வனவிலங்குகள் நடமாடும் இடமாக மாறியுள்ளது. இதன் காரணமாக எமது தொழிலாளர்கள் பெருந்தோட்ட பகுதிகளுக்கு வேலைக்கு போக முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய பாதுகாப்பற்ற நிலைமையாகும்.குறிப்பாக பெருந்தோட்ட பகுதிகளில் தற்பொழுது சிறுத்தைகள் காட்டெருமைகள் குளவிக்கூடுகள் என்பன அதிக அளவில் காணப்படுவதால் தங்களுடைய பணிகளை உயிரை பணயம் வைத்து மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அவ்வாறு பாதிக்கப்படுகின்றவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகம் மேற்கொள்வதில்லை.

தோட்டங்களுக்கு வேலைக்கு வராதவர்களின் வீடுகளை தோட்ட நிர்வாகங்களிடம் கையளிக்குமாறு தோட்ட நிர்வாக அதிகாரிகளால் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.வீடுகளை கையளித்துவிட்டு அவர்கள் நடுவீதிக்கு செல்வதா? இது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

எனவே தோட்ட நிர்வாகங்கள் தங்களுடைய இயலாமையையே இங்கு காட்டுகின்றார்கள். எனவே தோட்ட நிர்வாகம் பெருந்தோட்டங்களை உரிய முறையில் பராமரிப்பு செய்து ஒரு பாதுகாப்பான நிலைமையில் தொழிலாளர்களுக்கு தொழிலை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இதனை தோட்ட நிர்வாகங்கள் செய்ய முன்வராவிட்டால் தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக செயற்படுவதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம்.

இது தொடர்பாக மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்பதையும் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.”

 

Share
தொடர்புடையது
11 18
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு அழைத்து வரப்பட்டது உண்மையான செவ்வந்தி இல்லையா..!

நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டது உண்மையான செவ்வந்தியா என சந்தேகம் இருப்பதாக...

10 19
இலங்கைசெய்திகள்

கெஹெல்பெத்தர பத்மேவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் தீர்மானம்

பிரபல பாதாள உலகக்கும்பல் புள்ளியான கெஹெல்பெத்தர பத்மேவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைக்கு...

9 19
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிறுவர்கள் திறன்பேசி பயன்படுத்துவதற்கு தடை!

இலங்கையில் சிறுவர்கள் திறன்பேசிகள் அல்லது ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதனை தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மகளிர்...

8 20
இலங்கைசெய்திகள்

நாமல் ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து! சந்தேகிக்கும் மொட்டுக்கட்சி தரப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் உயிருக்கு இந்த அரசாங்கத்தினால் ஆபத்து ஏற்படுவதற்கான திட்டம் உள்ளது என்று...