செயற்கை நுண்ணறிவு (AI) தற்போது பல துறைகளிலும் கால்பதித்து, ChatGPT மற்றும் Gemini போன்ற நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. பணிகளை விரைவாகவும் துல்லியமாகவும் மேற்கொள்வதற்காக AI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனமான ரிலையன்ஸும் (Reliance) தற்போது AI துறையில் தடம் பதித்துள்ளது.
ரிலையன்ஸ், ‘Reliance Intelligence’ என்ற பெயரில் புதிய AI நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த நிறுவனத்தில் Reliance 70% பங்குகளையும், Meta (Facebook-இன் தாய் நிறுவனம்) 30% பங்குகளையும் வைத்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக, இரு நிறுவனங்களும் சேர்ந்து ரூ.855 கோடி முதலீடு செய்ய உள்ளன.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த AI முயற்சி இந்தியாவில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.