images 2 3
உலகம்

ரஷ்யாவுக்கு உதவிய இந்திய நிறுவனங்கள் உட்பட 45 நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை!

Share

உக்ரைன் மீதான போரில் ரஷ்ய இராணுவத்திற்கு உதவும் வகையில் செயல்பட்ட மூன்று இந்திய நிறுவனங்கள் உட்பட மொத்தம் 45 நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் (European Union) தடை விதித்துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தப் போரைக் கட்டுப்படுத்தத் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவிற்கு அழுத்தம் தரும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இந்தத் தடைகள், ரஷ்யாவிற்குப் பொருளாதார ரீதியில் உதவும் நிறுவனங்கள் மீதும் நீடிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் அடிப்படையிலேயே மூன்று இந்திய நிறுவனங்கள் உள்ளிட்ட 45 நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
AP25077692975328 1742344299
செய்திகள்உலகம்

காஸா, லெபனான் தாக்குதல்: யாருடைய ஒப்புதலும் தேவையில்லை – பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

காஸா அல்லது லெபனான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு வேறு எந்தத் தரப்பினரின் ஒப்புதலும் தேவையில்லை...

file 20241217 15 cx5sno
செய்திகள்உலகம்

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா ஊழல்:ஆஸ்திரேலிய பயனாளர்களுக்கு மெட்டா இழப்பீடு

மெட்டா (Meta) நிறுவனம் ஆஸ்திரேலியர்களின் தனியுரிமை மீறலுக்காகச் செலுத்த ஒப்புக்கொண்ட 50 மில்லியன் அமெரிக்க டொலர்...

image 29c6aa6e37
உலகம்செய்திகள்

உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில்  3 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா பெரும் வான்வழி...

images 1 7
உலகம்செய்திகள்

ரீகன் விளம்பரம் நீக்கப்படாததால் கோபம்: கனடாப் பொருட்களுக்கான வரிகளை 10% உயர்த்த டிரம்ப் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனைக் கொண்ட வரி எதிர்ப்பு விளம்பரத்தை ஒன்ராறியோ மாகாணம் ஒளிபரப்பியதையடுத்து, கனடாவிலிருந்து...