25 68f7986211c31
செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர சபை செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை: மேலதிக ஆசனப் பிரச்சினைக்கு ஜனாதிபதி சட்டத்தரணி ஆஜர்!

Share

வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வரை இடைக்காலத் தடை விதித்து இன்று (அக்டோபர் 21, 2025) உத்தரவு பிறப்பித்துள்ளது.

வவுனியா மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்காக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு ஆதரவு கோரப்பட்டபோது, ஜனநாயக தேசிய முன்னணியின் மேலதிக ஆசனத்தினால் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பரமேஸ்வரன் கார்த்தீபன் என்பவர் பிரதி மேயர் பதவி கோரி ஆதரவளித்திருந்தார்.

எனினும், இவர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட எல்லையில் வசித்த நிலையில், மாநகர சபையில் போட்டியிட்டதும், அதன் மூலம் பதவியைப் பெற்றதும் சட்ட விதிகளுக்கு மீறிய செயல்பாடு என எதிர்ப்பு எழுந்தது.

இதை எதிர்த்து, மாநகர சபை உறுப்பினர்களான தேசிய மக்கள் சக்தியின் சார்பில் க. விஜயகுமாரும் மற்றும் சுயேச்சை குழு உறுப்பினரான பிரேமதாஸ் சிவசுப்பிரமணியமும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த நான்கு தவணைகள் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இன்றைய தினம் (21) நீதிமன்றத்தால் மேற்குறித்த இடைக்காலத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கு தாக்கல் செய்தவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Rain 1200px 22 10 17
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் அதிக மழைவீழ்ச்சி: கடற்பரப்புகளில் பலத்த காற்று வீச எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையின் மத்தியில், யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக...

images 5 1
செய்திகள்இலங்கைசினிமாபொழுதுபோக்கு

விஜய்-சூர்யா-வடிவேலுவின் ‘Friends’ திரைப்படம் 4K தரத்தில் மீண்டும் வெளியீடு!

நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘ப்ரண்ட்ஸ்’ (Friends) திரைப்படம் மீண்டும்...

images 4 1
செய்திகள்இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள்: QR குறியீட்டு வவுச்சர்கள் வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பாதணிகளைப்...

1720617259 Piyumi 2
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான தொடர்பு: நடிகை பியூமி ஹன்சமாலியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை!

தற்போது பொலிஸ் காவலில் உள்ள பாதாள உலகக் குற்றவாளியான ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான உறவு குறித்து நடிகை...