1 32 1
செய்திகள்உலகம்

ஹொங்கொங் விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்து: இரு விமான நிலையப் பணியாளர்கள் பலி!

Share

ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (அக் 20) தரையிறங்கும் போது, ஒரு சரக்கு விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கி, ஒரு ரோந்து காரில் மோதி கடலில் மூழ்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இருவரும் விமான நிலையப் பாதுகாப்பு ஊழியர்கள் ஆவர்.

விமான நிலைய அதிகார சபையின் விமான நிலைய நடவடிக்கைகளுக்கான நிர்வாகப் பணிப்பாளர் ஸ்டீவன் யூ இது குறித்து விளக்கமளித்தார்.

துபாயிலிருந்து வந்த போயிங் 747 சரக்கு விமானம் நேற்று அதிகாலை 4:00 மணிக்குத் தரையிறங்க முற்பட்டபோது, விமான நிலையத்தின் வடக்கு ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று, வேலியைத் தாண்டி பாதுகாப்பு ரோந்து காரில் மோதி கடலில் பாய்ந்தது.

ரோந்து காரில் இருந்த 30 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. 41 வயதுடைய மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

1998 இல் இந்த விமான நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து நடந்த மிக மோசமான விபத்துகளில் இதுவும் ஒன்று என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...