நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின்னபோலேகம பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிக்கவெரட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டு, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20, 32 மற்றும் 51 வயதான நிக்கவெரட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர் என்று தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து நிக்கவெரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.