4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

Share

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இஷாரா செவ்வந்தி பதுங்கியிருந்ததாக கூறப்படும் கிளிநொச்சி பகுதிக்கு நேற்று அவரை் அழைத்துச் செல்லப்பட்டார்.

சஞ்சீவ கொலையின் பின்னர் அவர் பல நாட்கள் மறைந்திருந்ததாகக் கூறப்படும் இடங்களை ஆய்வு செய்ய அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில் இஷாராவைப் போன்ற தோற்றமுடைய யுவதியை தேடிய யாழ்ப்பாண சுரேஷ், கெஹல்பத்தர பத்மேவின் அறிவுறுத்தலின் பேரில் தக்சி என்ற பெண்ணைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

தக்சிக்கு சிங்களம் பேசத் தெரியாது என்பதனை சாதகமாக பயன்படுத்தி அவரை இந்த கும்பல் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தக்சியை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகவும் ஏமாற்றிய சுரேஷ் அவரை நேபாளத்திற்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய, தக்சிக்கு தெரியாமல் நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேபாளத்தில் செவ்வந்தி கைது செய்யப்பட்ட போது தக்சி மற்றுமொரு இடத்தில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...

images 1 2
செய்திகள்இலங்கை

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 3 சந்தேகநபர்கள் கைது!

நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின்னபோலேகம பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட...