1755232595226130 0
இலங்கைசெய்திகள்

இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரூ. 910 மில்லியனுக்கும் அதிக மதிப்பு உப்பு

Share

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 22,950 மெட்ரிக் தொன் உப்பை இலங்கை சுங்கம் தடுத்து வைத்துள்ளதாக சுங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரூ. 910 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள இந்த உப்புத் தொகையானது, தேசிய தரநிலைகளுக்கு இணங்க இல்லாததோடு, அரசாங்கம் நிர்ணயித்த இறக்குமதி காலம் நிறைவடைந்த பின்னரும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மிகப்பெரிய உப்புத் தொகையில் இதுவும் ஒன்றாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை தரநிலைகள் நிறுவனம் (SLSI) வழங்க வேண்டிய தரச் சான்றிதழ் இல்லாததாலும், அரசு விதித்த இறக்குமதி காலவரம்பை மீறியதாலும், இந்த உப்புத் தொகையை விடுவிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த முழு உப்புக்கும் தரச் சான்றிதழ் வழங்க நிறுவனம் மறுத்துள்ளதுடன், அந்த உப்பு தேவையான தரத்தைப் பூர்த்தி செய்யவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே 15ஆம் திகதி அமைச்சரவையின் முடிவின் அடிப்படையில், சீரற்ற வானிலை காரணமாக உள்ளூர் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக, ஜூன் 10ஆம் திகதி வரை அரசாங்கம் உப்பு இறக்குமதி தடையை தற்காலிகமாக நீக்கியது. அப்போது 1,50,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கை மொத்தமாக 1,43,655 மெட்ரிக் தொன் உப்பை (வரிகளுடன்) ரூ. 5.7 பில்லியன் மதிப்பில் இறக்குமதி செய்துள்ளது. இவற்றில் இதுவரை 1,20,705 மெட்ரிக் தொன் உப்பு மட்டுமே சுங்கத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...