2 17
இலங்கைசெய்திகள்

15 கோடி சம்பளமா.? யாரோ எழுதி விட்டுடாங்க… நான் தான் திட்டு வாங்குறேன்.! மமிதா பைஜூ பகீர்.!

Share

சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழும் மமிதா பைஜூ, ஒரு செய்தியாளர் சந்திப்பில் உருக்கமான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது சம்பளம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவல்கள், மற்றும் அதனைப் பின்தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் எழுப்பிய கருத்துகள் குறித்த தனது வருத்தத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் மமிதா.

சமீபத்தில் ஒரு இணையதளத்தில், “நடிகை மமிதா பைஜூ 15 கோடி சம்பளம் வாங்குகிறார்” என்ற செய்தி வெளியாகியிருந்தது.

இது விரைவில் சமூக ஊடகங்களில் பரவி, ரசிகர்கள் மத்தியில் வியப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து, அந்த செய்தியின் கீழ் அதிக அளவிலான விமர்சனக் கருத்துகள் குவிந்ததாக நடிகை கூறியுள்ளார்.

அந்த செய்தி குறித்து மமிதா பைஜூ, “நான் 15 கோடி சம்பளம் வாங்குறேன்னு யாரோ எழுதிட்டாங்க… அதுக்கு கமெண்ட்ஸில ‘இவளுக்கு 15 கோடியா?’ன்னு திட்டுறாங்க… யாரோ செய்த தப்பிற்கு எனக்கு திட்டு விழுது.” என்று கூறியுள்ளார்.

அதாவது, ஒரு தவறான தகவலை யாரோ போட, அதற்காக தன்னை பேசும் நிலைக்கு மக்கள் சென்றுவிட்டனர் என அவர் கூறுகிறார். இது போன்ற தவறான செய்திகளை சரிபார்க்காமல் பகிர்வதும், விமர்சனம் செய்வதும் கவலையை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...