செயற்கை நுண்ணறிவு (AI) உலகையே மாற்றியமைக்கும் இந்த வரலாற்றுத் தருணத்தில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘பெர்ப்ளெக்சிட்டி’ (Perplexity) செயலி வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.
கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிலும் முதல் இடத்தைப் பிடித்து, ChatGPT, ஜெமினி போன்ற உலகப் பிரம்மாண்டமான AI செயலிகளைப் பின்னுக்குத் தள்ளி, முதன்மை AI செயலியாகப் பெர்ப்ளெக்சிட்டி உயர்ந்துள்ளது.
இந்தியாவைச் சார்ந்த இந்த புதிய தலைமுறை செயற்கை நுண்ணறிவு சேவை அடைந்திருக்கும் இந்த வெற்றி மிகவும் பெருமைக்குரிய தருணமாகும்.
பெர்ப்ளெக்சிட்டி வெறும் சாதாரண சாட்போட் சேவையாக மட்டுமின்றி, தேடல் (Search), உரையாடல் (Chat), மற்றும் உற்பத்தித் திறன் (Productivity) கருவிகளை ஒருங்கிணைக்கும் ஒரு செயலியைாகச் செயல்படுகிறது. இது மாணவர்கள், படைப்பாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் அலுவலக வல்லுநர்கள் ஆகியோரின் தினசரி வாழ்க்கையை மிகவும் எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய AI செயலியின் மில்லியன் கணக்கான பதிவிறக்கங்கள் அதன் வெற்றியைக் காட்டுகின்றன. தீபாவளி சீசனில் பெர்ப்ளெக்சிட்டியின் இந்த வெற்றி, இந்தியத் தொழில்நுட்பத் துறையின் பெருமையையும் உலக அரங்கில் அதன் வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது. சமீப காலங்களில் இந்தியா சிறந்த கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துவது மட்டுமில்லாமல், அவற்றை உருவாக்குவதிலும் முன்னணியில் உயர்ந்து நிற்கிறது.