தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து மாகாணத் தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறை தினத்திற்குப் பதிலாக, எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை அன்று கற்றல் செயல்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.