10 12
இலங்கைசெய்திகள்

ஜெனீவாவை தவிர்க்க கூடிய அன்றைய ஜே.வி.பியின் தீர்மானம்..!

Share

ஜே.வி.பியின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று ஜெனீவா செல்ல தேவையிருந்திருக்காது என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தமிழீழத்துக்கான இறுதி போர் 2009ஆம் ஆண்டு நிறைவடைந்த ஒரு வாரத்தில் போரின் போது நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் உண்மை மற்றும் புனரமைப்பு தொடர்பிலான ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு ஜே.வி.பியின் சார்பில் நாம் கோரினோம்.

அந்த தேசிய ஆணைக்குழு அமைத்து அதன் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று ஜெனீவா தீர்மானம் வந்திருக்காது. யுத்தம் நிறைவடைந்து 16 வருடங்கள் நிடைவடைந்த நிலையில் நாங்கள் ஆட்சியை கைப்பற்றும் வரை அவை நடைபெற்றிருக்கவில்லை.

அதனால் உண்மை ஆணைக்குழு மற்றும் புனரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, குறித்த ஆணைக்குழுக்கள் மூலம் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் நீதியை பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.

இவற்றை நாம் மேற்கொள்வது ஜெனீவாவுக்கு காண்பிப்பதற்காகவல்ல. பல வருடங்களாக அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்ட கட்சி என்ற வகையில் மனித உரிமைகளை பாதுகாப்பது எமது கடமையாகும்.

அத்தோடு அனைத்து இனங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்பில் எமக்கிருக்கும் பற்றுதலாகும். எமது நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது, நீதியின் ஆதிபத்தியத்தை நிலைநாட்டுதல் மற்றும் சாமாதானத்தை ஏற்படுத்தி, நாட்டி இனி இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை முற்றாக ஒழிப்பது உங்களினதும் எங்களினதும் பொறுப்பாகும். எங்களால் மட்டும் இதை செய்யமுடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
19 5
இலங்கைசெய்திகள்

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி – உறுதி அளித்த அநுர அரசின் அமைச்சர்

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் சிறந்த தீர்வு முன்வைக்கப்படுமென்று சபை முதல்வரும்...

18 6
இலங்கைசெய்திகள்

யாழ். போதனாவில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார்....

17 6
இலங்கைசெய்திகள்

மாற்றம் செய்யப்பட்டது அநுர அரசாங்கத்தின் அமைச்சரவை..

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் பதவியேற்றனர். அதன்படி, அமைச்சர்களாக பிமல் ரத்நாயக்க –...

16 6
இலங்கைசெய்திகள்

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல்...